ஊரடங்கால் நடந்த ‘முருங்கைக்காய்’ சமாச்சாரம்..! ஐநா ஷாக் தகவல்…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


கொரோனா பாதிப்பால் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகலாம் என்று ஐநா தகவல் வெளியிட்டு உள்ளது.

 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உள்ளது. அதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இதன் தாக்கம் குறித்து ஐநா சபை மக்கள்தொகை நிதியம் ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் பெரும் மந்த நிலை காணப்படுகிறது. அதனால் கருத்தடை சாதனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்.

அதன் எதிரொலியாக 4 கோடியே 70 லட்சம் பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காத நிலை உருவாகும். இதனால் எதிர் வரும் மாதங்களில் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

மேலும், ஆண்களும் பெண்களும் வீட்டிலேயே இருப்பதால் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கும். 6 மாதங்களில் 3 கோடியே 10 லட்சம் மோதல் சம்பவங்கள் நடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு கால கட்டத்தில் குழந்தை திருமண சம்பவங்கள் நடைபெறலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


Leave a Reply