கொரொனா இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவில் 73 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்திருந்த தம்பதியர் கொரொனா வைரஸ் தாக்கிய நிலையில் மருத்துவமனையில் 6 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

 

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட வில்ஃபோர்ட், கெப்ளர் தம்பதியினர் மருத்துவமனையில் அடுத்தடுத்த படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வில்ஃபோர்ட் ஒருவர் உயிரிழந்தார். அதற்கு அடுத்த ஆறு மணி நேரத்தில் கெப்லர் உயிரிழந்தார்.

 

63 ஆண்டுகளாக இணைந்திருந்த தம்பதியர் சாவிலும் இணைபிரியாதது அவர்களின் பாசப்பிணைப்பை காட்டுகிறது. பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், உறவினர்கள் என ஏராளமானோர் கொண்ட குடும்பத்தை ஒன்றிணைக்கும் பாசப் பிணைப்பாக இவர்கள் திகழ்ந்ததாக இவர்களின் பேத்தி நட்டாலி தெரிவித்துள்ளார்.


Leave a Reply