‘ரெம்டெசிவிர்’ குறித்து அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ரெம்டெசிவிர் மருந்து கொரொனா வைரஸை எதிர்த்துப் போராடும் என்பதற்கு தெளிவான சான்றுகள் இருப்பதாக அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எலியட்ஸ் சயின்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து முதன் முதலில் எபோலாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

 

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த மருந்தை கொடுப்பதன் மூலம் அவர்களின் சிகிச்சை கால அளவு 15 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 1,603 பேரை கொண்டு தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அவர்களில் சிலருக்கு மட்டும் ரெம்டெசிவிர் வழங்கப்பட்டது.

 

மற்றவர்களுக்கு வேறு சில மருந்துகள் வழங்கப்பட்டன. ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் குணமானவர்களின் விகிதம் 8% ஆகவும், வேறு சில மருந்துகளை எடுத்துக் கொண்டவர்களின் குணமடையாத விகிதம் 11.6 சதவீதமாகவும் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. ஆனால்ரெம்டெசிவிர் முதல் மருத்துவ பரிசோதனை முயற்சியில் தோல்வியை சந்தித்ததாக சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply