பொது முடக்கம் மே 3க்கு பிறகும் நீட்டிப்பா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் மே 3-ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படலாம் என சூசகமாக கூறியுள்ள மத்திய உள்துறை நாட்டின் பல மாவட்டங்களில் கணிசமான தளர்வுகள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் பொது முடக்கத்தால் நிலவும் சூழல் குறித்து விரிவான விவாதங்களை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் முழு முடக்கத்திற்கு நாடு முழுவதும் நல்ல பலன் கிடைத்திருப்பதாக கூறியுள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு கணிசமான சலுகைகளை வழங்கும் புதிய நெறிமுறைகள் வரும் நான்காம் தேதி அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இந்த சலுகைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் கிடைத்த பலன்களை இழந்துவிடாத வகையில் வரும் 1-ம் தேதி வரை பொது முடக்கம் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

ஏற்கனவே தெலுங்கானா அரசு பொதுக்கூட்டத்தை மே மாதம் 7ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பஞ்சாப் அரசு பொது முடக்கத்தை 3 ஆம் தேதிக்கு பிறகு இரண்டு வாரத்திற்கு நீட்டித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தனர்.


Leave a Reply