இளம்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய ராசிக்கல் வியாபாரி கைது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு தருணத்தில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நபரை அந்த பெண்மணியை அடித்து துன்புறுத்தியுள்ளார். பெண்ணின் தந்தை மும்பையிலிருந்து காவல்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்ததோடு அந்த பெண்மணியையும் சென்னை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

 

ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மும்பையில் இருந்து அழைத்த தொழிலதிபர் ஒருவர் சென்னையில் தன்னுடைய மகள் கொடுமைக்கு உண்டானதாக தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு போலீசார் வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 27 வயதான பெண்மணி ஒருவர் சென்னை வேப்பேரியில் வசித்து வந்ததாகவும் கூறினார்.

 

ஊரடங்கால் வேலை இழந்து தவித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு கோரி நான்காண்டுகளாக அறிமுகமாகியுள்ள ராசிக்கல் வியாபாரி ராயர் அகர்வாலை அணுகியுள்ளார். அவரும், புரசைவாக்கம் பகுதியில் வீடு எடுத்து பெண்மணியை தங்க வைத்துள்ளார்.சனிக்கிழமை அதிகாலை திடீரென்று காரணமின்றி அகர்வால் அந்த பெண்மணியை கடுமையாக துவக்கியுள்ளார்.

 

முகம், விரல் ஆகிய பகுதிகளில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார் ராசிக்கல் வியாபாரி அகர்வால். தலைமறைவாக இருந்த ராசிக்கல் வியாபாரி அகர்வாலை 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அடித்து துன்புறுத்துதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், மிரட்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

 

பெண்கள் தயவுசெய்து காவலன் செயலியை தரவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும், அல்லது ஆபத்தான காலத்தில் 100 அல்லது 1 0 9 1 அல்லது 1 0 9 8 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Leave a Reply