ஊரடங்கு நாளை மட்டும் தளர்வு…! கடைகள் திறக்கவும் அனுமதி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு, மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் கூடுதலாக ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை.

 

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பல இடங்களில் வெளியே நடமாடுவதும், மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வதுமே இதற்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனை அடுத்து, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அமலானது இன்றிரவு முடிவடைய உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதி அளித்து உள்ளார்.

இதனால் மக்கள் அவசரமின்றி, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கி செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பின்னர் மே 1 முதல் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாநகராட்சிகளில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் 1 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply