மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு!
இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யுஜிசியால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. பல பாடத்திட்ட வாரியங்கள் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இன்னும் நடத்தாததால் காமன் அட்மிஷன் டெஸ்டே நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை வழங்கி விட்டு ஜூலை மாதத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் வகுப்புகளை தொடங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளை விரைவாக நடத்த ஓஎம்ஆர் வகை தேர்வு சரியான விடைகளைத் தேர்வு செய்யும் வகையிலான தேர்வுகளை நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக கடை பிடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. யுஜிசியால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட குழு இந்த பரிந்துரைகளை வழங்கி உள்ளது .
இதனை அடிப்படையாகக் கொண்டு பரிந்துரைகளை ஆலோசித்து விரிவான அறிவுறுத்தல்களை பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே இந்த பரிந்துரைகள் இறுதியானது அல்ல எனவும் கூறியுள்ளது.






