கொரொனா இருப்பதாக கூறி பீதியை கிளப்பிவிட்டு கழிவறை வழியாக போலீஸிடம் இருந்து தப்பித்த மாயாண்டி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாயாண்டி மீது கொள்ளை, அடிதடி உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஆழ்வார் திருநகர் பகுதியில் நடைபெற்ற திருட்டு தொடர்பாக மாயாண்டியை கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

 

அப்போது சப்தமாக இருமிய மாயாண்டி தனக்கு சளி பிடித்திருப்பதாகவும் காய்ச்சல் வருவது போல் உள்ளதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அவனை அழைத்து சென்ற போலீசார் சிறப்பு வார்டில் பரிசோதனைக்கு சேர்த்துள்ளனர். மாயாண்டியை உள்ளே அனுப்பிவிட்டு போலீசார் வெளியில் அமர்ந்து இருக்க உள்ளே சென்ற மாயாண்டி கழிவறை செல்ல வேண்டும் என்று மருத்துவரிடம் கூறியுள்ளான்.

 

கழிவறை சென்ற அவன் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. சந்தேகம் கொண்டு போலீசார் சென்று பார்த்தபோது பின்பக்கம் சுவர் ஏறி குதித்து அவன் தப்பி சென்றது தெரியவந்தது. உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு மாயாண்டியின் புகைப்படத்தையும் அனைத்து வாட்ஸ்அப் குழுக்களுக்கும் அனுப்பிவிட்டு போலீசார் தேடத் தொடங்கியுள்ளனர்.

 

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே மாயாண்டியின் மாமனார் வீடு இருப்பதாக அறிந்து சென்று விசாரித்தபோது அவர் தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் உதவியுடன் முழுவதும் படகில் சென்று தேடி பார்த்துள்ளனர்.

 

மாநகரில் உள்ள 23 சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மாயமான மாயாண்டியை தேடும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. மாநகரில் உள்ள 23 சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மாயமான மாயாண்டி தேடும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது.


Leave a Reply