பட்டப்பகலில் சிறுமி கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் சிறுமி கண்முன்னே தந்தையை வெட்டிக் கொலை செய்து தலையுடன் 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சந்திரமோகன் என்கிற தலைவெட்டி சந்துரு தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

 

தேவி தியேட்டர் அருகே 3 பேர் அடங்கிய கும்பல் சந்துருவை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து தலையை துண்டித்து எடுத்துள்ளது. தலையை ஒரு சாக்கில் வைத்து எடுத்துச் சென்ற அந்த மூன்று பேரும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். சரணடைந்த சரவணன் மற்றும் அவரது தம்பி செல்வம் மற்றும் நண்பர் சுரேஷ் ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சரவணன் தந்தையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சந்துரு தலையை வெட்டிக் கொன்றதாகவும் இதன் காரணமாகவே தலைவெட்டி சந்திரன் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே முன்பகை காரணமாக நடந்த கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவத்தின் போது சந்திரன் இருந்த அவரது மகளான சிறுமி லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply