தமிழகத்தில் 2000 பேரை கடந்த கொரோனா பாதிப்பு…! அலற வைக்கும் சென்னை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. அதன்படி இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

 

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2058ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 121 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 103 பேர்கள் ஆவர்.

 

இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 673 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 27 என்றும், தமிழகத்தில் 1128 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 7093 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து மொத்தம் 101,874 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Leave a Reply