--- --:--:-- --

மெட்ரோ ரயிலில் பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம்..!

4

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் வைக்கப்பட்டுள்ள தனியார் நிதி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று கடும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழி உங்களுக்கு 0% வட்டி/ஆதாயமே தரலாம், ஆனால் எங்கள் நிலையான வைப்பு நிதி 14.40% வட்டி தருகிறது என்று பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த அந்த விளம்பரப் பலகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், சென்னை மெட்ரோ ரயிலில் இப்படி ஒரு விளம்பரம் நியாயமா? முதலாளித்துவம் பெண்களைப் ஒரு போக பொருளாக, விளம்பரப் பொருளாக, முன்னிறுத்துகிறது என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம். பெண் நண்பரால் ஆதாயம் இல்லை வட்டியால் ஆதாயம் என ஏன் ஒப்பிடுகிறீர்கள்? உடனடியாக இந்த விளம்பரத்தை மெட்ரோ எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon