ஆடாமல் ஆடுகிறேன் பாடலுக்கு ஊர் சுற்றிய இளைஞரை ரோட்டில் ஆட சொன்ன போலீஸ்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஆடாமல் ஆடுகிறேன் ஆண்டவனைத் தேடுகிறேன் என்ற பாடலுக்கு நடனமாட வைத்து ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினார். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சூரிய நாராயணா சாலையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றிய வாகன தணிக்கையில் சிக்கிய ஒரு இளைஞருக்கு நூதன முறையில் பாடம் புகட்டினர். ஆடாமல் ஆடுகிறேன் ஆண்டவனைத் தேடுகிறேன் என்று திரைப்பட பாடலை செல்போனில் ஒலிக்கச் விட்டு அந்த பாடலுக்கு நடனமாடுமாறு கூறினார். போலீசாரின் கேலி கிண்டலுக்கு இடையே வேறு வழியின்றி அந்த இளைஞரும் நடனமாடினார்.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய ஊழல்களை கண்டறிந்து போலீசார் அவற்றை அழித்தனர். ஊரடங்கால் மது கிடைக்காத நிலையில் கள்ளச்சாராய புழக்கம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது 650க்கும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 496 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறை கள்ளச்சாராய வேட்டையில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

 


Leave a Reply