சட்டமன்றத்தில் அடிக்கடி கேள்வி கேட்பதால் கூட ரெய்டு நடந்திருக்கலாம்: கே.என்.நேரு பேட்டி
இன்று காலை முதல் திருச்சியில் உள்ள கே.என்.நேரு இல்லத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது.
காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆய்வு நடந்தது. நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். ஒரு ஃபைலும், ஒரு பேப்பரும் எடுத்திருக்கிறார்கள். அரசு, காவல்துறை எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம். சட்டமன்றத்தில் அடிக்கடி கேள்வி கேட்பதால் கூட ரெய்டு நடந்திருக்கலாம்.
இது மாதிரி 3வது ரெய்ட்டை நான் சந்திக்கிறேன். அரசியல் காழ்புணர்ச்சியில் இது போன்று நடக்கிறது. எங்கள் தலைவர் ஸ்டாலின் என்னிடம் பேசினார். ரெய்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு என்னிடம் கூறினார். – கே.என்.நேரு பேட்டி
📱 Share on WhatsApp 𝕏 Share on X




