ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு..!
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அரசுப் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்கு (MBBS/BDS) தேர்வாகியுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த 7.5% சிறப்பு இடஒதுக்கீடு திட்டம் மூலம், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராகும் கனவு நனவாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




