விரைவில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு பயணிப்பதற்காக ஸ்பேஸ் 6 நிறுவனம் வடிவமைத்துள்ள விண்வெளிவோடும் முக்கிய சோதனையை வெற்றிகரமாக முடித்து உள்ளதாக அதன் நிறுவனர் எலான்மஸ் தெரிவித்துள்ளார். விண்வெளியில் பயன்படுத்தப்படும் மிக குளிர்ந்த எரிபொருளால் ஏற்படும் அதீத அழுத்தத்தைப் தாங்குவது விண்வெளி ஓடத்தின் முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது.

 

இந்நிலையில் கிரையோஜனிக் பிரஷர் எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் அதிக அழுத்தத்தைத் தாங்குவதற்கான சோதனையை ஸ்பேஸ் 6 நிறுவனம் வடிவமைத்துள்ள எஸ்‌எம் 4 வெற்றிகரமாக முடித்துள்ளது. அதனை எலான்மஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக ஸ்பேஸ் 6 நிறுவனம் வடிவமைத்த 3 மாதிரிகளும் இந்த சோதனையில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply