வாட்ஸ் அப் அறிவித்த புதிய கட்டுப்பாடு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வாட்ஸ் அப் செயலியில் அதிகமுறை அனுப்பப்பட்ட செய்திகள் பகிரப்படுவது 70 சதவீதம் குறைந்துள்ளது. கொரொனா வைரஸ் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை குறைக்கும் வகையில் கடந்த 7ஆம் தேதி வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியது.

 

அதன்படி பயனர்களால் அதிகமுறை அனுப்பப்பட்டதாக கண்டறியப்படும் செய்திகளை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பெற முடியும் என்ற வசதி நடைமுறைக்கு வந்தது. இதனால் அந்த வகையிலான தகவல்கள் பகிரும் விகிதம் 70 சதவீதம் குறைந்துள்ளதாக வாட்ஸ் அப்பை நிர்வகித்து வரும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.


Leave a Reply