கொரோனாவுக்கான தடுப்பூசி செப்டம்பரில் தயாராகிவிடும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரசுக்கான தடுப்பூசி செப்டம்பர் இறுதியில் தயாராகி விடும் என புனேவில் உள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரொனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக பல நாடுகளும் பல நிறுவனங்களும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

 

உலகம் முழுவதும் சுமார் நூற்றுக்கும் அதிகமான தடுப்பூசிகள் தற்போது ஆராய்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. புனைவை சேர்ந்த சேரம் என்ற நிறுவனம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்பல்கலைக் கழகத்துடன் கொரொனா வைரசுக்கு தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த ஆய்வு மையத்தின் தலைவர் தங்களது தடுப்பு ஊசி மனிதர்களிடம் செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இறுதி செய்யப்பட்டு செப்டம்பர் மாத இறுதியில் தயாராகி விடும் என்றார். மேலும் மருந்தின் விலை சுமார் 1000 ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்தார்.


Leave a Reply