மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரொனா நோயாளி! கட்டி பிடித்து விடுவேன் என மிரட்டல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரொனா நோயாளியை பிடிக்க வந்த காவலர்களிடம் அருகே வந்தால் கட்டிப் பிடித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 48 வயதான நபருக்கு கொரொனா உறுதியான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து தப்பியவர் வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார். அவரை அழைத்து செல்ல காவல்துறையினர் ஒரு வந்தப்போது தன்னைப் பிடிக்க முயன்றால் கட்டிப் பிடித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.


Leave a Reply