சூரிய வெப்பம் கொரோனாவை அழிக்கும்?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பருவநிலை மாற்றம், கொரொனா பாதிப்பு விகிதத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகளவு வெப்பம், கொரொனா வைரஸை கொன்றுவிடும் என்ற தகவல் நாடு முழுவதும் கொரொனாவை விட வேகமாக வருகிறது. இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆராய அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வல்லுனர்கள் அடங்கிய குழு ஆய்வில் ஈடுபட்டனர்.

 

இதற்காக உலக நாடுகளில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதில் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேலான வெப்பநிலை இருக்கும் பகுதிகளில் கொரொனா வைரஸின் ஆயுட்காலம் குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

அதாவது கொரொனா வைரசின் ஆயுட்காலம் 15 மணி நேரத்திற்கு மேல் என்றால் வெப்பநிலை அதிகமாக இருக்கும் இடங்களில் அந்த நேரம் பாதியாக குறைந்து இருப்பதாக தெரியவருகிறது. கொரொனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுபோன்ற செய்திகள் பொதுத் தளங்களில் பல்வேறு விவாதங்களை தோற்றுவித்துள்ளன.

 

தற்போது கோடைகாலம் என்பதால் கொரொனா பாதிப்புகள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் திடீரென கோடை மழை பெய்ததால் அதன் மூலம் கொரொனா பரவும் அபாயம் இருப்பதாக மக்களிடையே தகவல் பரவிவருகிறது.

 

மக்கள் இந்த தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறது மருத்துவ வல்லுனர்கள் குழு .


Leave a Reply