கோவை ஹட்கோ காலனியில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி.இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி.போலீசார் விசாரணை !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை பீளமேடு அருகே உள்ள ஹட்கோ காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதர்.
(வயது 72). இவரது மனைவி பத்மாவதி (வயது 55). இவர்களுக்கு பாலாஜி(வயது 49), முரளி (வயது 45)ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர்கள் 2 பேரும் தனது தாய், தந்தையுடன் வசித்துவந்தனர்.முரளி கோவையில் உள்ள ஒரு தனியார் வாட்ச் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

 

நேற்று இரவு வழக்கம்போல வீட்டில் இருந்தவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.இந்த நிலையில் ஸ்ரீதர் அதிகாலை எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது,கழிவறை முழுவதும் விஷவாயு பரவியிருந்துள்ளது. இதனை சுவாசித்த அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். நீண்ட நேரமாகியும் தந்தை திரும்பி வராததால் அவரை தேடி அவரது இரண்டாவது மகன் முரளி கழிவறைக்கு சென்றுள்ளார்.விஷ வாயு தாக்குதலால் அவரும் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

 

தந்தை,தம்பி இருவரும் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த மூத்த மகன் பாலாஜி கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது,விஷ வாயுவை சுவாசித்த அவர் அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார். இதனைப் பார்த்த பானுமதி அதிர்ச்சி அடைந்தார்.

 

பின்னர், இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் கதவை உடைத்து உள்ளே வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த ஸ்ரீதர்,முரளி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஸ்ரீதர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

தகவல் அறிந்த கிடைத்ததும் பீளமேடு இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கழிவறையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த பாலாஜியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததும்,இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Leave a Reply