ஓசோன் படலத்தில் இருந்த மிகப்பெரிய துளை அடைபட்டது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஓசோன் படலத்தில் இருந்து மிகப் பெரிய துளை அடைபட்டு விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியில் படாத வண்ணம் பாதுகாப்பதே ஓசோன் படலம்.கடந்த மாதம் ஆர்க்டிக் பகுதிக்கு மேலே ஓசோன் படலத்தில் மிகப் பெரிய துளை ஏற்பட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள்.

 

வட துருவப் பகுதியில் காணப்படும் குறைந்த வெப்பநிலை காரணமாகவே இவ்வளவு பெரிய துளை ஏற்பட்டதாக கூறிய விஞ்ஞானிகள் இது தென் துருவம் வரை பரவும் என எச்சரித்தார்கள். சுமார் ஒரு மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கு ஓசோன் படலத்தில் இந்த துளை ஏற்பட்டு இருந்தது.

 

கொரொனாவால் உலகெங்கும் ஆலைகள் இயங்குவது தடைபட்டுள்ளது, போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் குறைந்து துளை அடைபட்ட தா என்றால் அது காரணம் கிடையாது. போலார் ஒர்டெக்ஷ்ஸ் எனப்படும் துருவ சூழலே காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


Leave a Reply