சொகுசு காரில் சென்ற இளைஞரை தோப்புக்கரணம் போட வைத்த அதிகாரி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி விலை உயர்ந்த காரில் ஜாலியாக ஊர் சுற்றிய தொழிலதிபரின் மகனை பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் தோப்புகரணம் போட வைத்தார். கொரொனா பரவலை தடுக்க பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் சொகுசு காரில் சுற்றி திரிந்த 20 வயது இளைஞனை பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஒருவர் மடக்கிப்பிடித்து தடியால் விரட்டி தோப்புக்கரணம் போட வைத்தார். விசாரணையில் அந்த இளைஞன் ஆஷாய் மிட்டாய் கடை உரிமையாளர் தீபக் மகன் என்பது தெரியவந்தது. இதனிடையே உரிய ஆவணங்கள் இருந்தும் தனது மகளை பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி தவறாக நடத்தியதாக தீபக் போலீசில் புகார் அளித்துள்ளார்.


Leave a Reply