அதிகாரி எனக்கூறி பணம் வசூல் செய்த மோசடி கும்பலுக்கு அடி!

கொரொனா ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் ஏழை எளிய மக்கள் கவலையில் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் கூலித் தொழிலாளர்களும் நெசவாளர்களும் நிறைந்த சேலம் நெய்க்காரப்பட்டி அமைப்புசாரா நல வாரியத் துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு கும்பல் ஒன்று சென்றுள்ளது. பிரதமர் நிவாரண நிதியாக வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாகவும் அனைவரும் 300 ரூபாய் சந்தா கொடுத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் சேர்ந்து கொள்ளும்படி கூறியுள்ளனர்.

 

300 ரூபாய் சந்தா கட்டினால் ஐந்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரும் என்று மக்களை நம்ப வைத்து வீட்டுக்கு வீடு தலா 300 ரூபாய் வீதம் வசூல் செய்து கொண்டிருந்த போது அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விசாரித்துள்ளனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து சிக்கிக்கொண்டனர்.

 

இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பணம் பெற்று ஆசாமிக்கு கண்ணம் வீங்கும் அளவுக்கு அரை விட்டனர். அடி வாங்கியதும் பம்மிய அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் தாங்கள் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்பட ஆல்பத்தை நீட்ட அவர்கள் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.

 

உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த மோசடி கும்பலை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். நிவாரணம் தொடர்பாக மக்களுக்கு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு செய்யாமல் ஒரு ரூபாய் பணம் கூட மத்திய, மாநில அரசுகள் வழங்குவதில்லை.

 

அப்படி நிவாரணம் வழங்கினாலும் அரசு மக்களிடம் எந்த ஒரு முன் பணமும் வசூலிப்பது இல்லை என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது மக்களின் பொறுப்பு. அதே நேரத்தில் இத்தகைய மோசடி கும்பல் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Leave a Reply