திருமணமான 50 நாட்களில் மனைவி பிரிந்ததால் கணவன் தற்கொலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருமணமான சில நாட்களிலேயே காதல் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. காதல் திருமணம் தற்கொலையில் முடிந்தது ஏன்? 25 வயதான தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சுபாஷ் திருமணமான இரண்டே மாதங்களில் தற்கொலை செய்துகொள்ள மனைவியின் பிரிவு தான் காரணமா? கரூர் அருகே உள்ள மண்மங்கலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.

 

இவருடைய மகன் 25 வயதான சுபாஷ் கரூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும், 25 வயதான ஷர்மிளா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வர கடந்த ஐம்பது நாட்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகள் இருவரும் சுபாஷின் வீட்டில் ஒரு பகுதியிலேயே வசித்து வந்தனர்.

 

கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது மாமியார் வீட்டிற்கு சுபாஷ், ஷர்மிளாவும் சென்றுள்ளனர். மூன்று நாட்களுக்கு விருந்து முடிந்தவுடன் தனது தாய் வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்துவிட்டு பிறகு வருவதாக ஷர்மிளா தெரிவித்துள்ளார். இதனால் மனைவியை மாமனார் மாமியார் வீட்டிலேயே விட்டுவிட்டு தனியாக வீட்டிற்கு திரும்பியுள்ளார் சுபாஷ். மீண்டும் இரண்டு நாட்களுக்கு பிறகு சுபாஷ் அழைத்ததற்கு மனைவி ஷர்மிளா வீட்டிற்கு வர முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

 

சரி மனைவி எப்படியாவது வந்துவிடுவார் என 20 நாட்கள் வரை காத்திருந்த சுபாஷுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையில் ஷர்மிளா கணவரிடம் போனில் பேசுவதையும் குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. காதல் மனைவி ஏன் திருமணம் ஆனதும் தன்னை ஒதுக்குகிறாள் என்றால் என்ற வேதனையில் சுபாஷ் கடந்த இரண்டு நாட்களாக இருந்ததாக தெரிகிறது.

 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த வாங்கல் பகுதி போலீசார் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுபாஷ் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply