அதிமுகவை சூழ்ந்த சோகம்: முன்னாள் எம்பி திடீர் மரணம்…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


அதிமுக முன்னாள் எம்பி ஆர்.டி. கோபாலன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.

 

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் ஆர்.டி. கோபாலன். 1980ல் கம்பம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் கண்டார்.

 

47 ஆயிரத்து 577 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கம்பம் மகேந்திரனை வீழ்த்தி, எம்எல்ஏவானார். பின்னர் 1986 முதல் 1992 வரை கட்சியின் மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்து உள்ளார்.

 

அண்மைக்காலமாக அவர் உடல்நிலை கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இன்று அவர் காலமானார்.

 

முன்னாள் எம்பியின் மரணம் அதிமுகவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் முன்னணி பிரமுகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மகன் ஆர்.டி.ஜி குமரன் அமமுக பிரமுகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Leave a Reply