புகை பிடிப்பவர்களுக்கு கொரொனா தொற்று இல்லையா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் தொற்றிலிருந்து செல்களை நிக்கோட்டின் பாது காக்கும் என சில ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரொனா நோயாளிகளை பரிசோதித்து புகை பிடிக்கும் பழக்கமுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது.

 

செல் ஏற்பிகளில் படிந்துள்ள நிக்கோட்டின் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்க கூடுமா என்ற அடிப்படையில் தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனை பரிசோதித்து பார்ப்பதற்காக பிரான்ஸ் அரசிடம் விஞ்ஞானிகள் அனுமதி கேட்டுள்ளனர். கொரொனா வைரஸ் தொற்று ஏற்படும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் மிக விரைவாக செயல்படும்.

அப்போது உடலில் உருவாகும் மித மிஞ்சிய எதிர்வினை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழி வகுக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க நிக்கோட்டின் உதவுமா என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்த உள்ளனர். இது ஆராய்ச்சிக்கான விஷயம் மட்டுமே என்றும் புகைபிடிப்பதனால் நிக்கோடின் படிவதால் தீங்கு விளைவிக்கும் என்பதை மறந்து விடக்கூடாது என்பதை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


Leave a Reply