உடும்பை வேட்டையாடி டிக் டாக்கில் பதிவிட்ட இளைஞர்கள் கைது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உடும்பை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணப்பாறையை அடுத்த சோலையார் பட்டியை சேர்ந்த 6 பேர் துவரங்குறிச்சி வனப்பகுதிக்குள் உடும்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு உள்ளனர்.

 

முன்னதாக வேட்டையாடிய உடம்பை கையில் பிடித்தபடி வேட்டைக்காரன் பரம்பரை என்ற பாடலுக்கு நடனமாடி டிக் டாக்கில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த துவரங்குறிச்சி வன பாதுகாவலர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கை மீறி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் போலீசாரின் கேமரா மீது கற்களை எறிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. நகர் முழுவதும் ஆட்கள் நடமாட்டத்தை போக்குவரத்தையும் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

 

இளமரல் பகுதியில் மைதானம் ஒன்றில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் சிலர் கேமராவை பார்த்ததும் ஆங்காங்கே சிதறி ஓடி மறைந்து கொள்ள முயற்சித்தனர். அவர்களில் சிலர் கேமரா மீது கற்களை வீசி உடைக்க முயன்றனர். அதிர்ஷ்டவசமாக ட்ரோன் மீது கற்கள் படாத நிலையில் அங்கு சென்ற போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.


Leave a Reply