ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகள் கொரொனாவிற்கு பலனளிக்கவில்லை! அதிர்ச்சி தகவல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகள் கொரொனா சிகிச்சையில் எந்த பலனையும் அளிக்கவில்லை என்று வெளியாகியுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா தொற்று ஏற்பட்டு அசித்ரோ மைசின் மருந்துடனும், அது இல்லாமலும் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்தினை எடுத்துக் கொண்ட 368 கொரொனா நோயாளிகளிடம் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

நியூ இங்கிலாந்து மருத்துவ இதழுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில் கொரொனாவிற்கு எதிரான சிகிச்சையில் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்து பலனளிக்கிறது என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

 

கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள். காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்குவது என உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மருத்துவ பணியாளர்கள் ஏற்கனவே உபயோகப்படுத்திய உபகரணங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனாவுக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், காவல்துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காதது துரதிருஷ்டவசமானது என்று உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

 

அங்கு உச்ச நீதி மன்றத்தின் சார்பில் சில அரசு மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் நகராட்சி ஊழியர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply