முதல்வர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய ஆனந்துார் அஜ்மல் என்ற நபர் மீது போலீசார் வழக்கு பதிவு

Publish by: மகேந்திரன் --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூரை சேர்ந்த அஜ்மல்கான் என்ற வாலிபர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இவர் சமூக வலைதளமான முகநுாலில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் , மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தவறாக சித்தரித்து அவதுாறு பரப்பியதாகவும், மேலும்,ஆனந்துார் அரசு ஆரம்ப சுகாதார உத்தரவை மீறி தன்னை நிருபர் என்று கூறி கொரோனா சிகிச்சை முறையை வீடியோ செய்ததாகவும், மருத்துவர்கள் செவிலியர்களை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததாகவும் ஆனந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய (பொ) மருத்துவர் ஜெயக்காந்தன் புகாரின் பேரில் காவல்துறை இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply