தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த மருத்துவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். கொரொனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று பொது சுகாதார பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் மூன்று மருத்துவர்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் மருத்துவர்கள் அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கொரொனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை எதிர்த்து சீல் அகற்றப்பட்டது. சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் ஓசூரை அடுத்த பேகபள்ளி கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி வந்து மூன்று நாட்கள் தங்கி உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி அந்த நபருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பேகபள்ளி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

 

அதன் காரணமாக வெளியாட்கள் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வந்தது. மேலும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கொரொனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து சீல் அகற்றப்பட்டது.


Leave a Reply