மாமனாரை கொலை செய்த மருமகன்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை மருமகன் வெட்டி கொலை செய்தார். மோடமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி, மூத்தமகள் சாந்தியின் பராமரிப்பில் இருந்ததாகவும் தனக்கு கிடைக்கும் அரசின் உதவித் தொகையை சாந்தியிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த இளைய மகளின் கணவர் நல்லதம்பி அரசு உதவித் தொகையை தங்களுக்கு கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நல்லதம்பிக்கும், ராஜா மணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மாமனாரை மருமகன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த நல்லதம்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply