--- --:--:-- --

இந்தியாவில் ரேபிட் சோதனை கிட்கள் தயாரிப்பு!

11

இந்தியாவிலேயே ராபிட் சோதனை கிட்களை தயாரிக்கும் பணிகளை தென்கொரிய நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸ் கண்டறிய பரிசோதனைகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றன. இதைப்போல் உலக நாடுகளும் அதிக எண்ணிக்கையில் ராபிட் சோதனைகளை வாங்குவதால் அவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

 

இதை கவனத்தில் கொண்டு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தென்கொரியாவை சேர்ந்த பயோ சென்சார் ஹெல்த் நிறுவனம் அரியானா மாநிலம் குர்கான் அருகே இருக்கும் ஆலையில் வாரத்திற்கு 5 லட்சம் கிட்களை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதன்படி முதற்கட்டமாக 5 லட்சம் கிட்டுகளை அந்த நிறுவனம் கடந்த 19ம் தேதி தயாரித்தது.வருங்காலத்தில் 5 லட்சம் என்ற எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon