தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக நிதியினை வழங்கிய கிரஷர் சங்கத்தினர் மற்றும் அ.தி.மு.க – வினர் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1596 இல் இருந்து 1629 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரானாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

 

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 134 ஆகவும்,குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆகவும் உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவற்றோர் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியினை வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.இந்த நிலையில் தொழிலதிபர்களும்,பொதுமக்களும்,மாணவர்களும் தாமாக முன்வந்து முதல்வரின் நிவாரண நிதிக்காக நிதியினை அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கிரஷர் சங்கத்தின் சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.19 லட்சம் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராசாமணியை சந்தித்த கிரஷர் சங்கத்தினர் ரூ.19 லட்சத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்கினர்.அப்போது,வெங்கடேஸ்வரா புளூமெட்டல்ஸ் உரிமையாளர் நந்தகுமார்,ஸ்ரீபுளூ மெட்டல்ஸ் உரிமையாளர் ஞானசேகரன் , டி.கே.வி புளூ மெட்டல்ஸ் உரிமையாளர் ஆர்.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் நிவாரண நிதியினை அமைச்சரிடம் வழங்கினர்.மேலும்,வெங்கடேஸ்வரா புளூமெட்டல்ஸ் உரிமையாளர் நந்தகுமார்,ஸ்ரீ புளூமெட்டல்ஸ் உரிமையாளர் ஞானசேகரன், ஆகியோர் பாரத பிரதமரின் நிவாரண நிதிக்காக தலா ஒரு லட்ச ரூபாயினையும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினர்.

சூலூர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.2.50 லட்சம் நிவாரண நிதி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கப்பட்டது.

 

சூலூர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.2.50 லட்சம் நிவாரண நிதியாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கப்பட்டது.இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்த சூலூர் ஒன்றிய அ.தி.மு.க – வினர் முதல்வரின் நிவாரண நிதியினை வழங்கினர்.மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்புஅசோகன்,மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் செந்தில் பாபு,கலங்கல் நடராஜ்,அரசூர் சிவசாமி,கணியூர் செல்வராஜ்,காங்கேயம்பாளையம் சந்திரசேகர்,காடம்பாடி மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிவாரண நிதியினை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் போது எம்.எல்.ஏ-க்கள் வி.பி.கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜூனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply