மீன் பிடி தடைக்காலத்தில் தமிழக கடல் எல்லையில் பன்னாட்டு கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பதா? தமிழக மீனவ மக்கள் கட்சி கண்டனம்!!

Publish by: மகேந்திரன் --- Photo :


மீன்பிடி தடைக்காலத்தில், தமிழக கடலோர பகுதிகளில் பன்னாட்டு தனியார் கப்பல்கள் மீன்பிடிக்க அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ள தமிழக மீனவ மக்கள் கட்சி தலைவர் அ.கோல்டன் பரதர், கண்டனமும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கோல்டன் பரதர் கூறியிருப்பதாவது:

 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழக மீனவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் மீன்பிடித்தல் செய்ய பல நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில், ஏப்ரல் 15 முதல் தமிழக கடலோரங்களில் மீன்கள் இனபெருக்க தடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் 2 மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் , தமிழக கடல் எல்லைகளில் பன்னாட்டு ராட்சத கப்பல்கள் மீனபிடிப்பதாக வந்த தகவல் அடிப்படையில் இதை தமிழக மீனவ மக்கள் கட்சி வண்மையாக கண்டிக்கிறது. சென்னை மயிலாப்பூர், நொச்சிகுப்பம் மீன்வர்கள் இன்று காலையில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது நொச்சிகுப்பத்தின் நேர்கிழக்கு திசையில் பன்னாட்டு ராட்சத கப்பல்கள் மீன்பிடிப்பதை பார்த்துள்ளனர். மீன்கள் இனப் பெருக்கத்திற்க்காக தடைக்காலம் அறிவித்துவிட்டு பன்னாட்டு ராட்சத கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளித்தது யார்?

 

இந்திய கடலோர காவல் படையினரை தாண்டி நம் கடலோர பகுதிகளில் அவர்களை மீன்பிடிக்க அனுமதி அளித்தது யார்? இப்படி பன்னாட்டு கப்பல்கள் மீன்பிடிப்பது தொடர்ந்தால், மீன்பிடி தடைக்காலம் முடிந்து தொழிலுக்கு செல்லும் போது மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

 

ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால் மிகவும் பாதிப்பிற்குள்ளான மீனவர்கள் இத்தகைய பன்னாட்டு வர்த்தக கப்பல்களின் வருகையால் அச்சம் அடைந்துள்ளனர். உடனடியாக அந்த பன்னாட்டு கப்பல்கள் நம் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தமிழக மீனவ மக்கள் கட்சியின் தலைவர் கோல்டன் பரதர், தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


Leave a Reply