--- --:--:-- --

பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத தி.மு.க-வின் உண்மை முகம் – அமைச்சர் ரமேஷ்

11

த.வெ.க அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், “கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 

 

குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் 1,500 க்கும் மேற்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருப்பதும், அந்தப் பதிப்பகத்தின் இருப்பே பலருக்குத் தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இது வெறும் நூல் கொள்முதல் தொடர்பான சர்ச்சை அல்ல; அறிவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பட்டதா என்ற மிகத் தீவிரமான கேள்வி!

 

 

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசிக்கொண்டே, பெரியாரின் பெயரால் உருவாக்கப்பட்ட அறிவுத் தளத்திலேயே வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. ஊழலற்ற ஆட்சி, சமூக நீதி, பகுத்தறிவு என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது!

 

 

அறிவாலயம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தமிழகத்தின் வளங்களைச் சுரண்டிய திமுக, இப்போது பெரியார் அறிவுலகத்தின் நூல்களிலும் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். பெரியாரின் பெயர் என்பது ஊழலை மறைப்பதற்கான கவசம் அல்ல. பெரியாரின் கொள்கைகள் என்பது அரசியல் ஆதாயத்திற்கான வியாபாரப் பொருளும் அல்ல. இதனை புரிந்துகொண்டு முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon