கொரொனா நிவாரணம் : வாரி வாரி வழங்கும் இந்தியா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா நிவாரணம் தேவைப்படும் நாடுகளுக்கு சார்க் நாடுகள் கூட்டமைப்பு கூறும் முன்னரே இந்தியா 13 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள், மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. கொரொனா பாதிப்பு மற்றும் தடுப்பு பணிகளை சார்க் நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கோரிக்கை விடுத்தார்.

 

இதற்காக நிதியம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவின் சார்பில் சுமார் 76 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். பாகிஸ்தான் நிதி வழங்குவது பற்றியோ நிவாரண நடவடிக்கைகள் பற்றியோ இதுவரை வாய் திறக்கவில்லை.

 

இந்த சூழலில் இந்தியாவின் சார்பில் நிதி உதவி அறிவிக்கப்படுவதற்கு முன்பே 13 கோடி ரூபாய் மதிப்பிலான தடுக்கும் மருந்துகள், மருத்துவ பொருட்கள் உள்ளிட்டவற்றை மாலத்தீவு உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply