--- --:--:-- --

அகில இந்திய மருத்துவ கவுன்சலிங் 5-ம் சுற்று ரிசல்ட்

9

அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு காலியிடச் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் படிப்பில் இன்னும் காலியிடங்கள் உள்ளன. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அகில இந்திய கலந்தாய்வின் முதல் நான்கு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்து, தற்போது சிறப்பு காலியிடச் சுற்று எனப்படும் 5 ஆம் சுற்றுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

 

இந்தநிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் அதிக காலியிடங்கள் இருப்பதாக மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார்.

 

 

வீடியோவின்படி, சிறப்பு காலியிடச் சுற்றுக்குப் பிறகும் இன்னும் 409 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இந்த காலியிடங்கள் உள்ளன. இதில் அதிகப்படியான காலியிடங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மருத்துவ நிறுவனங்களிலே உள்ளன.

 

 

5 ஆம் சுற்றுக்கு மொத்தம் 1219 இடங்கள் காலியாக இருந்தன. இதில் 946 எம்.பி.பி.எஸ் இடங்கள், 207 பி.டி.எஸ் இடங்கள் மற்றும் 66 பி.எஸ்.சி நர்சிங் இடங்கள் அடங்கும். 5 ஆம் சுற்றுக்கு பின்னர் மொத்தம் 811 இடங்கள் நிரம்பின. இதில் 537 எம்.பி.பி.எஸ் இடங்கள், 208 பி.டி.எஸ் இடங்கள், 66 பி.எஸ்.சி நர்சிங் இடங்கள் அடங்கும். அந்தவகையில் எம்.பி.பி.எஸ் இடங்கள் மட்டுமே முழுமையாக நிரம்பாமல் 409 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் மட்டும் 283 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. எனவே 6 ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கல்லூரி வாரியான காலியிடங்களின் எண்ணிக்கை

செட்டிநாடு மருத்துவக் கல்வி நிறுவனம் – 1

சவீதா மருத்துவக் கல்வி நிறுவனம் – 1

எஸ்.ஆர்.எம் – 6

ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி – 17

ஸ்ரீ பாலாஜி – 77

சத்யசாய் – 181

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon