தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தமிழகத்தில் 28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி மதிப்பில் முறைகேடு நடைபெற்றதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு வரை கூடுதலாக மணல் அள்ளப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.
இது தொடர்பாக 2023-ல் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், 2024 ஜூன் மாதம் டி.ஜி.பி-க்குக் கடிதம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை, புதிதாக வழக்குப்பதிவு செய்து இன்று தமிழகம் முழுவதும் 30 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது. புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




