கொரொனா தடுப்பூசி செப்டம்பரில் தான் தயாராகுமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா நோய்க்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராக வாய்ப்பிருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து துறை அலுவலர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியியல் துறையும் கொரொனா தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளது.

 

இந்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்க பிரிட்டன் அரசு அனுமதி வழங்கிய நிலையில் அந்த சோதனைகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியியல் துறை பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

இந்த தடுப்பூசி உலகம் முழுவதும் விரைந்து கிடைக்கும் வகையில் பெரும் எண்ணிக்கையில் அதை தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகளுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

கொரொனா பாதித்த தாயிடமிருந்து பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. கொரொனா பாதித்த கர்ப்பிணிகளை கையாளுவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கொரொனா தொற்றுள்ள தாயிடமிருந்து குழந்தைக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு முன் அல்லது பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆனால் இது தொடர்பான புள்ளிவிவரங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

 

பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு தாயிடம் இருந்து நீர் துளிகள் மூலம் வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் குழந்தை தாயை தனிமைப்படுத்துவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் மூலம் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.


Leave a Reply