2 பெண் டாக்டர்கள் மீது தாக்குதல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டெல்லியில் மளிகை பொருட்கள் வாங்க மார்க்கெட்டுக்கு சென்ற இரண்டு டாக்டர்கள் தாக்கப்பட்டனர். தெற்கு டெல்லியில் சார்ஜா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 2 மருத்துவர்கள் கௌதம் நகர் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். டாக்டர்கள் வெளியே வருவது கொரொனா பரவ வழி வகுத்துவிடும் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என அங்கு ஒரு நபர்கூறியுள்ளார்.

 

அந்த நபருக்கு அங்குள்ள ஆட்கள் சிலரும் ஆதரவாக திரண்ட நிலையில் எதிர்ப்பு தெரிவித்த இரண்டு மருத்துவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தாக்கப்பட்ட 2 மருத்துவர்களுக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Leave a Reply