அத்தியாவசிய பொருட்களை வாங்க ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வர வேண்டும் : புதிய கட்டுப்பாடு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சேலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வர வேண்டும் என்று புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வாகனங்களில் வண்ணமிட்டு அடையாளப்படுத்தப்படுகிறது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

இதனை பொருட்படுத்தாமல் நாள்தோறும் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வருவது வாடிக்கையாகிவிட்டது. அவர்களை போலீசார் வழிமறித்தால் மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்கி வருவதாக கூறி தப்பி விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் சேலம் மாநகரில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் ஒரு நபர் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதனை கண்காணிப்பதற்காக இருசக்கர வாகனங்களில் வண்ண நிற கோடுகள் வரையும் பணி தொடங்கியுள்ளது. மஞ்சள் நிற கோடுகள் வரையப்பட்ட வாகனங்கள் ஒரே நாளில் மட்டுமே பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படும்.

 

இரண்டாவது நாளில் சிவப்பு நிற கோடுகளும், மூன்றாவது நாளில் பச்சை நிறக் கோடுகளும் வரையப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் இதனை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த நடைமுறையை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Leave a Reply