கொரொனா வைரஸ் பாதிப்பு குறித்து முதன்முறையாக ஐ.நா நடத்தும் ஆலோசனை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இன்று முதன்முறையாக ஆலோசனை நடத்த உள்ளது. உலகளவில் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 88 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 

இந்த கொடிய வைரஸ் சீனாவில் பரவ தொடங்கியதிலிருந்து வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த வேண்டும் என பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு சீனா, ரஷ்யா ஆகிய நிரந்தர உறுப்பினர்களும் தென்னாப்பிரிக்கா போன்ற தற்காலிக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

 

சுகாதாரம் தொடர்பான விவரங்கள் குறித்து ஆலோசிக்க ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிற நாடுகளில் அழுத்தத்தின் காரணத்தால் கொரொனா பாதிப்பு தொடர்பாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இன்று முதன்முறையாக ஆலோசனை நடத்த உள்ளது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது.


Leave a Reply