அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 11,000 த்தை தாண்டியுள்ளது!
அமெரிக்காவில் ஒரேநாளில் 29 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு மூன்று லட்சத்து 66 ஆயிரம் பேர் இலக்காகியுள்ளனர்.நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 243 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் 19 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பி இருந்தாலும் 8 ஆயிரத்து 800க்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனம் மிசிசிபி மற்றும் டெல்லி பகுதியில் உள்ள தனது பத்தாயிரம் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு எடுக்கும்படி கூறியுள்ளது. தியோடர் ருசல்ட் எஸ்போர்ட் விமான தாங்கிக் கப்பலின் கேப்டனாக பணியாற்றி வந்தவர் பிரட் கோஷியர். இவர் தனது கப்பலில் வீரர்களுக்கு கொரொனா நோய்த்தொற்று உள்ளதாகவும் அதனை தடுக்க அரசு தரப்பில் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மேல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்.
இவரது கடிதம் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கேப்டனை பதவி நீக்கம் செய்து அமெரிக்க பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே 850 கவசங்களை தயாரித்துக் கொடுக்க 3m என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதமும் 55 மில்லியன் முக கவசங்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.






