2 கோடி முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்கும் ஆப்பிள் நிறுவனம்!
ஆப்பிள் நிறுவனம் மருத்துவ பணியாளர்களுக்கு 2 கோடி முக கவசங்களை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. கொரொனா வைரஸ் பரவலால் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாடுகளின் மருத்துவ பணியாளர்களுக்கு 2 கோடி முக கவசங்களை வழங்குவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவிலுள்ள சாண்டா கிளாரா விலுள்ள கேசர் மருத்துவமனைக்கு முகக் கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆப்பிள் நிறுவன தலைவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் உலகளாவிய தங்களது வாடிக்கை நிறுவனங்களிலிருந்து கவசங்களை பெறுவதாக தெரிவித்துள்ளார்.






