ஊரடங்கு முடிந்த உடன் பயணியர் ரயில் சேவை துவங்குமா? துவங்காதா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


21 நாள் ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் பயணிகள் ரயில் சேவை துவங்கும் என்று வெளியான செய்திகளை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. ஊரடங்கும் முடிந்தவுடன் பயணிகள் ரயில் சேவையை துவக்குவதற்கான முயற்சிகளில் ரயில்வே ஈடுபட்டுள்ளதாகவும் அனைத்து பணியாளர்களும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

 

ஏப்ரல் பதினான்காம் தேதி 21 நாள் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள நிலையில் அதற்கு பிந்தைய காலகட்டத்திற்கான ரயில் முன் பதிவுகள் தொடங்கி விட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே அமைச்சகம் ஊரடங்கு முடிந்த பின்னரே கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு எடுக்கும் போது பின் அதன் அடிப்படையில் மட்டுமே பயணிகள் ரயில் சேவையை துவக்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


Leave a Reply