கொரொனா அச்சத்தால் மக்கா, மதினாவிலும் ஊரடங்கு உத்தரவு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்று சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


Leave a Reply