கொரோனாவுக்கு எதிரான போர் : 5-ந் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை 9 நிமிடங்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்வோம்..! பிரதமர் மோடி அழைப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் வரும் ஞாயிறன்று (ஏப்ரல் 5-ந் தேதி) இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் 9 நிமிடங்களுக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து விட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, மொபைல் டார்ச் லைட்டுகளை ஒளிர விடுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி 3-வது முறையாக நாட்டு மக்களிடையே இன்று உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடியின் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

 

ஊரடங்கு உத்தரவின் 10-ம் நாளை வெற்றிகரமாக எட்டியுள்ளோம்.முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நாட்டு மக்களுக்கு நன்றி. நாம் அனைவரும் இணைந்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கொகோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து போராடி ஒளிமயமான எதிர்காலத்தை கொண்டு வர வேண்டும்.

 

நாம் எடுக்கும் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. இதனால் உலக நாடுகள் நம்மை பின்பற்றுகின்றன.

 

நமது ஒற்றுமைையை இந்தத் தருணத்தில் நாம் உணர வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு உங்களின் 9 நிமிடம் எனக்குத் தேவை. உலகிற்கு நமது ஒற்றுமையை உணரச் செய்ய வேண்டும்.

 

எனவே ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் அனைத்து மின் விளக்குகளையும் அனைத்துவிட்டு, அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி அல்லது மொபைல் டார்ச் லைட்டை அடித்து ஒளியேற்றுங்கள். இது கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை உற்சாகப்படுத்தும். நம் ஒற்றுமையை உலகிற்கு காட்டும் என பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply