மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவல் குறைவு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவால் கடந்த ஒரு மாதத்தில் மற்ற நாடுகளைவிட இந்தியா குறைவான இடத்திலேயே இருப்பதாக சென்னை கணித அறிவியல், கல்வி அறிவியல் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மார்ச் 17-ஆம் தேதி நிலவரப்படி கொரொனா பாதித்த ஒருவரின் தொற்று மற்றொருவருக்கு பரவும் போது 1.7 ஆக இருந்த நிலையில் மார்ச் 26 ஆம் தேதி அது 1.81 ஆக அதிகரித்தது.

 

இதே காலத்தில் உலகில் சராசரியாக கொரொனா தொற்று பரவல் ஒருவரிடமிருந்து இரண்டு முதல் மூன்று பேராக இருந்தது. அதே நேரம் மார்ச் மாதத் தொடக்கத்தில் மூன்றாக இருந்த தொற்று எண்ணிக்கை மாத இறுதியில் ஆயிரத்துக்கும் மேல் ஆக உயர்ந்தது. எனினும் ஸ்பெயின், இத்தாலி, தென்கொரியா, அமெரிக்கா நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு மிக சமநிலையான ஒன்றாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

கொரொனா தொற்று மட்டுமின்றி உயிரிழப்பையும், இந்தியா மற்ற நாடுகளை விட மிகவும் குறைந்த நிலையிலேயே நீடிப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. முதல் வாரத்தில் மூன்றிலிருந்து 43 ஆக இருந்த கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 114 மார்ச் 29ஆம் தேதி ஆயிரத்து 71 ஆகவும் அதிகரித்தது.

 

ஆனால் இந்த எண்ணிக்கையை ஒட்டி இருந்த தென்கொரியாவில் மார்ச் 29ஆம் தேதி ஆயிரத்து 766 பேர் பாதிக்கப்பட்டனர். சிங்கப்பூரில் 29 நாட்களில் 17 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஊரடங்கு முடிய வாய்ப்புள்ளது. பதினான்காம் தேதி இந்தியாவில் எண்ணிக்கை 3000 ஆகலாம் என்றும் மிக மோசமான பரவலாக இருந்தாலும் ஐந்தாயிரம் வரை தொடலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் அமெரிக்காவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மற்றும் இத்தாலியில் ஒரு லட்சத்து 2 ஆயிரம் ஆக உள்ள எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலேயே உயர்ந்து வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply