கவர்ச்சியான உடையில் லைவ் பெல்லி டான்ஸ்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


துனிசியாவின் நடன அழகியான நெர்மினி ஷிவார் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் தமது நாட்டு மக்களுக்காக பெல்லி டான்ஸ் ஆடி அதனை லைவ்வாக செல்போன் மூலம் வெளியிட்டார். இடுப்பை வளைத்து ஆடும் இந்த புகழ் பெற்ற நடனத்திற்கான கவர்ச்சியான உடையை அணிந்து வந்தவர் அரேபிய இசை அதிர அதிர தனது வீட்டின் அறையில் இருந்து நடனமாடினார்.

 

எங்கே பார்த்தாலும் மக்கள் கொரொனா கிருமியை பற்றியும் மரணத்தைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டு உள்ளனர். டைட்டானிக் படத்தில் கப்பல் மூழ்கியது என்று தெரிந்ததும் இசைக்கலைஞர்கள் கடைசி நிமிடம் வரை தங்கள் இசையை நிறுத்தவில்லை.

 

அதைப் போன்று நானும் மிகவும் பயந்து போயிருக்கும் நிலையிலும் மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன் என்று கூறுகிறார் இந்த நடன அழகி.


Leave a Reply