கொரொனாவால் ஸிவிக்கி, ஜோமாட்டோக்கு பாதிப்பா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உணவகங்கள், ஹோட்டல்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஸிவிக்கி, ஜோமாட்டோ ஆகியவை உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. டீக்கடைகள் திறந்திருக்கும் என்றும் ஆனால் கூட்டமாக நின்று தேநீர் அருந்துவதற்காக அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பெட்ரோல் பங்குகள், எல்பிஜி கேஸ் நிரப்பும் நிலையங்கள், ஏஜென்சிகள் செயல்பட தடை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகம், மெடிக்கல் உள்ளிட்ட மருந்து விற்பனை கடைகள் திறந்திருக்கும். உழவர் சந்தை உள்ளிட்ட வேளாண் உற்பத்திப் பொருள், விற்பனை சந்தைகள், கடைகள், கால்நடை சந்தைகள், மீன்மார்க்கெட் மற்றும் கடைகள் உள்ளிட்டவை வழக்கம்போல் திறந்திருக்கும்.

 

ரேஷன் கடைகள் உள்ளிட்ட பொது விநியோக பொருட்கள் அங்காடிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply